Monday, April 19, 2010

மயங்கி விழுந்த அசின்... பதறிய விஜய்!

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன், நடிகை அசின் ஜோடி சேரும் புதிய படத்தின் சூட்டிங் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது.

மலையாளத்தில் வெளியாகி சுமாரான வெற்றி பெற்ற பாடிகார்ட் படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு தமிழில் இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.

காரைக்குடி பகுதியில் நடந்து வரும் சூட்டிங்கில் விஜய், அசின், ராஜ்கிரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று வருக்கிறார்கள். படம் பிடிக்கப்படும் நேரம் போக மீதி நேரத்தில் அசின் தனக்கான கேரவனில் ஓய்வெடுப்பார்.

நேற்று இது‌போல கேரவனில் ஓய்வெடுத்து விட்டு, அடுத்த காட்சிக்கு தயாவதற்காக மேக்-அப் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அசின் மயங்கி விழுந்தார். இதை பார்த்த படக் குழுவினர் அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அசினுக்கு மயக்கம் என்றதும் விஜய் உள்ளிட்ட அனைவரும் பதறிவிட்டனர்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சைக்கு பிறகு அசினுக்கு மயக்கம் தெளிந்தது. கேரவன் வேனில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. மெஷினில் காஸ் கசிவு ஏற்பட்டதால் அசினுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


Sunday, April 11, 2010

மீண்டும் நடிப்பேன் : சோனியா அகர்வால்


செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

செல்வராகவனும், நானும் கணவன்-மனைவியாக வாழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை. விவாகரத்து செய்யும் போது நிறைய யோசித்தேன். பிறகு நடப்பது நடக்கும் என்று சம்மதித்தேன். இப்போது நான் சுயமான பெண். இந்த சுதந்திரம் எனக்கு பிடித்து இருக்கிறது.

விவகாரத்தானதும் சொந்த ஊருக்கு அழைத்தனர். ஆனால் எனக்கு போக மனமில்லை. மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். கதைகள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். விரைவில் நடிப்பேன்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன். இப்போது ஆசை வந்துள்ளது.


Monday, April 5, 2010

பையா

பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது.

காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!

வழியிலே பார்த்த பெண்ணுக்காக குழியிலே கூட விழலாம் என்கிற அளவுக்கு லவ்வில் விழுந்து வைக்கிறார் கார்த்தி. அவரை மயக்கிய அந்த அழகான பெண் தமன்னா. அதென்னவோ தெரியவில்லை, இவர் போகும் இடத்துக்கெல்லாம் தமன்னாவும் வருகிறார் சொல்லி வைத்த மாதிரி. அப்படிதான் ரயில்வே ஸ்டேஷனிலும் ஒரு சந்திப்பு. உடன் வரும் ஆசாமி, கார்த்தியை டாக்சி டிரைவர் என்று நினைத்துக் கொண்டு "வண்டி சென்னை வருமா" என்று கேட்க, மனசுக்குள் ஹார்ன் அடிக்கிறது கார்த்திக்குக்கு. ஆனால், ஆசாமி எதற்காகவோ இறங்குகிற நேரம் பார்த்து "வண்டிய கிளப்பு" என்கிறார் தமன்னா. அவ்வளவுதான் விருட்டென்று 120 க்கு போகும் கார்த்தி, தமன்னாவின் விருப்பத்திற்கேற்ப மும்பை வரைக்கும் போகிறார் காரிலேயே. ஆசைப்பட்ட பெண் அருகில் இருந்தாலும், பயணம் என்னவோ பதற வைக்கிறது.

தமன்னாவை தேடி ஒரு கும்பலும், கார்த்தியை தேடி இன்னொரு கும்பலும் விரட்ட, இருவரையும் புஜபலத்தால் வென்று தமன்னாவை மும்பைக்கே கொண்டு சேர்க்கிறார் கார்த்தி. அப்போதும் கூட தன் காதலை சொல்லாத கார்த்தியிடம், எப்படி சேர்ந்தார் தமன்னா? முடிவு.
அவிழ்த்துவிட்ட காளையிடம், குடையை விரித்து காட்டிய மாதிரி ஒரு ஆக்ரோஷம் கார்த்தியிடம். அதே நேரத்தில் குணா கமல் மாதிரி தமன்னாவை காதலால் கசிந்துருகுவதும் அற்புதம். லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு. தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்கிற போது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே சொய்ங்ங் என்று கிழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டரை கலகலக்கிறது.

அவ்வப்போது வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிப்பதும், மழையில் நனைந்து ரசிகர்களை குளிர வைப்பதும்தான் தமன்னாவின் மெயின் நடிப்பாக இருக்கிறது. தேனும் தித்திப்பும் மாதிரி, இணைந்தே இருக்கிறது தமன்னாவும் கவர்ச்சியும். போதாதா? பேஸ்த் அடித்துப் போகிறது மொத்த தியேட்டரும்.

இடையிடையே வரும் தாதாக்களின் எபிசோடு, பல முறை ஷேவ் செய்யப்பட்ட பிளேடு. தமிழ்சினிமாவிலேயே தாதாக்கள் மாறி ரொம்ப வருஷம் ஆச்சுங்க சாரே... சண்டக்கோழி, ரன் என்று முந்தைய படங்களின் சாயலை விட முடியவில்லை லிங்குசாமியால். அவருக்கேயுரிய காதல் நகாசுகள் இந்த படத்தில் மிஸ்சிங். சண்டக்கோழியில் மீராஜாஸ்மினின் குறும்புகள் மறுபடியும் நினைவில் வந்து ஏங்க வைக்கிறதே சாமி...

பையனின் துள்ளாட்டம் யுவன்சங்கர் ராஜாவிடம்தான். பின்னணி இசை மிரட்டல் என்றால், பாடல்கள் எல்லாமே தாலாட்டு. அடடா மழை போன்ற மெலடிகளும், யுவனே பாடியிருக்கும் ஒரு சோகப்பாடலும் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வரிசையில்.

மயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். எடிட்டர் ஆன்ட்டனியின் 'கட்டிங்'கும் கூட செம போதைதான்! விசாலமாக பயணிக்க முடியாமல் காருக்குள்ளேயே முடங்கிப் போனதால், பிருந்தாசாரதியின் பேனாவும் 'மூடி'யாகவே இருக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் அதையும் மீறி மனசுக்குள் 'இங்க்' தெளிக்கிறார் மனுஷன்.

நெடுஞ்சாலை பயணம் ஓ.கே. நிழல்தான் கொஞ்சம் கம்மி!

Sunday, April 4, 2010

உள்ளாடைக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய 6 வயது இரட்டையர்கள் கைது

நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. அதில், பயணம் செய்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் ஒரு பெண்ணும், அவளது 6 வயது இரட்டை குழந்தைகளும் ஜட்டிக்குள் மறைத்து “கோகைன்” என்ற போதை பொருள் கடத்தியது தெரிய வந்தது. அப்பெண்ணிடம் இருந்து 3 கிலோவும், 2 சிறுவர்களிடம் இருந்து 700 கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் நைஜீரியா போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் கணவரிடம் போதை பொருள் எதுவும் இல்லை.

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.