Friday, April 29, 2011

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்

http://qa.rasigan.com/wp-content/gallery/rajinikanth/Bollywood%20Actor%20Rajinikanth.jpgமயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic3ko2QJ8U1wF8b8uD-SVybxo2ImD1Q2blUMcAjZoio6zArGnGqbvfFsYTHTWyBEkr1lvbxDdVsqsPcZ7hzRRZfQ43RRvORQYZElycMHhdIRMD2G1inqQUjM0ew9zFBJR8byyv2XKUetA/s400/endhiran-rajinikanth.jpg

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் முன்பதிவு செய்யப்பட்ட சில காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு எதிர்பாராத விதமாக திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.movieinf.com/wp-content/images/2009/08/rajnikanth-wallb.jpg

மருத்துவமனையில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.


Thursday, February 10, 2011

பயபுள்ள எப்படி இருப்பான்?


'யாருமே இல்லாத அனாதையாக வாழும் ஹீரோவுக்கும், எல்லோரும் இருந்து அனாதையாக வாழும் நாயகிக்கும் இடையே உள்ள யதார்த்தமான நட்பு, எப்படி காதலாகிறது என்பதுதான் இந்த 'பயபுள்ள' படம்.

வழக்கமாக படங்களில் காதலுக்கு எதிராக வில்லன்கள் இருப்பார்கள். ஆனால் இதில் காதலுக்கு காரணமாக வில்லன் இருப்பார்.

பாசத்தோடு கால்நடைகளை கவனித்துக்கொள்ளும் நாயகன், உறவு முறை வைத்து, சொந்தம் கொண்டாடுவது படத்தில் வித்தியாசமாக இருக்கும்.

கிராமத்து மண் வாசம் வீசும் ஹீரோ-ஹீரோயினாக கவின், கவிதாஸ்ரீ அறிமுகங்கள் நடிக்க, சர்மிலி, வடிவுக்கரசி, விட்டல், ராகவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு-கணேஷ் ராஜா, பால ஐயப்பன், எடிட்டிங்-சுதா, இசை-கபிலேஸ்வர், பாடல்கள்-சரவணன், கபிலேஸ்வர், முருகன் மந்திரம், உதயக்குமார், ஆக்ஸன்-மிரட்டல் செல்வம், எழுத்து -இயக்கம் கே.எஸ்.சரவணன்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.பி.பால நமச்சிவாயன், ஆர்.மணிமாறன் இணைந்து 'தேர்ட் ஐ' மீடியா விஷன் சார்பில் தயாரித்துள்ளது. இப்படத்தினை வாழ்த்தி ரஜினி கடிதம் எழுதி கொடுத்துள்ளார் என்கிறது படக்குழு.

Sunday, January 23, 2011

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்


சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன.

அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி :

விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை.

அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம்.

ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.

இவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.

Monday, January 17, 2011

சிம்பு, பரத் மோதல்.


தெலுங்கு ஹிட் படமான 'வேதம்' தமிழில், 'வானமாக' ரீமேக் பண்ணியிருக்கிறார்கள்.

இதில் சிம்பு, அனுஷ்கா, வேகா, பிரகாஷ் ராஜ், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கியமான ரோல்களில் நடிக்கின்றனர்.

தமிழுக்கு தகுந்தமாதிரி 'வானத்தை' மாற்றியவர்கள், ஸ்டைலிஸ் ப்ளஸ் டெக்னிக்கலாக உருவாக்கினார்களாம்.

வானம் படத்துக்காக வேலை செய்யும் போது, பரத்-சிம்பு இருவருக்கும் உரசல் பற்றிக்கொண்டதாக பேசினார்கள்.

படத்தில் வெஸ்ட்ரன் 'ராக்' இசைக்கலைஞராக நடித்துள்ளார் பரத், இவருக்கு காதலியாக வேகா இணைந்துள்ளார். எவன்டி உன்னை பெத்தான் பாடல் சிம்பு ஸ்பெஷல்.

நான் 'ஹூ ஏம் ஐ' என்ற ராக் பாடலில் என்னை வேறு மாதிரி பார்க்கலாம். நான் பாட்டுக்கு டான்ஸ் பண்றதைவிட, இசைக்கருவியை சீரியசாக வாசிப்பதை ரசிக்கலாம்.

அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞனைப்போல என் 'மேனரிசம்' இருக்கும். என் கேரக்டருக்காக 'ராக் ஸ்டார்களின்' பாடி லாங்க்வேஜ்ஜை கவனித்து, அச்சு அசலாக நடித்துள்ளேன்.

இந்த வருஷம் திருத்தணி, யுவன் யுவதி, ட்ரிபிள் பைவ் படங்கள் என பிஸியாக நடிக்கிறேன். மல்டி-ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடிப்பது பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.

ஒரே ஒரு ஹீரோவாக படத்தில் நடிக்கும் போது இனம் புரியாத அழுத்தம் உண்டாகும். படம் ரிலீசான பிறகு 'பாக்ஸ் ஆபிஸ்'வசூலை கணக்கு போட்டு பார்ப்பார்கள்.

மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடிக்கும் அனுபவம் அலாதியானது. நல்ல ட்ரென்ட்டும் கூட வானம் படத்துக்காக நடிக்கும் போது சிம்புக்கும் எனக்கும் உரசல் ஏற்பட்டதாக முணுமுணுக்கிறார்கள்.

நாங்க இரண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று பரத் பேசியிருக்கிறாராம்.

Sunday, January 16, 2011

127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

டேனி பாய்ல்ஸின் 127 அவர்ஸ் படத்தின் 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் மூலம் அவருக்கு இரண்டாவது கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டேனி பாய்ல் இயக்கத்தில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தந. அந்தப் படம் ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கர்களை தட்டிச் சென்றது.

தற்போது டேனி இயக்கி, ரஹ்மான் இசையமைத்துள்ள 127 அவர்ஸ் மலையேறும் ஆரன் ரால்ஸ்டன் என்பவர் பற்றிய கதையாகும்.

இந் நிலையில் Critic's Choice எனப்படும் விமர்சகர்கள் விருதை 'இன்செப்ஷன்', 'தி சோஷியல் நெட்வொர்க்' ஆகிய படங்கள் தட்டிச் சென்றன.

சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசை ஆகியவற்றுக்கான விருதுகளை பேஸ்புக் நிறுவனர் பற்றிய இந்தப் படம் வென்றது. அதே போல லியார்னாடோ டி காப்ரியோ நடித்த இன்செப்ஷன் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றுள்ளது.

பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் வழங்கும் இந்த விருது வாங்குபவர்களுக்கு ஆஸ்கர் வாங்கும் வாய்ப்பு அதிகம் என்பது குறிபபிடத்தக்கது.

அரசியல்வாதிகளை பகைத்த காரணத்தால் விஜய்க்கு வந்த நெருக்கடி

தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் கலைஞர் குடும்ப அரசியல்வாதிகளை பகைத்தாலும் பகைத்தார் விஜய் அவர் படும்பாடு பெரும் பாடாக இருக்கிறது.

ஒரு திரைப்படம் வெளிவந்தால் நடிகர்களை அழைத்து நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சிகளை நடாத்தும் சன் டிவி, கலைஞர் ரிவி போன்றன விஜய் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. விஜயகாந்துக்கு நடந்த புறக்கணிப்பே விஜய்க்கும் நடந்துள்ளது.

அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் அண்டிப் பிழைப்பது சினிமாவில் முக்கிய அம்சமாக உள்ளதை ரஜினி, கமல் இருவரதும் செயல்களில் காணலாம். விஜய் – அஜித் இருவரும் அந்த வழியை பின்பற்றாத காரணத்தால் இத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

இன்று தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தமிழ் சினிமாவை காண்பிப்பதில் தோன்றியுள்ள சிக்கல்கள் வேறு இனங்களிடையே இல்லாத சிக்கலாக உள்ளது. இந்திப்படங்களில் இத்தகைய இழி நிலை இல்லாமை கவனிக்கத்தக்கது. தமிழ் சினிமா தமிழ் அரசிலை அழிக்குமா இல்லை தமிழ் அரசியல் தமிழ் சினிமாவை அழிக்குமா என்ற போட்டி தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது. எப்படியோ அழிவுதான் பரிசு என்பதுதான் இந்தப் போட்டியின் முடிவாகப் போகிறது.

Thursday, January 13, 2011

நிதியுதவி செய்த நடிகை சினேகா


போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப்பின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போலியோவை ஒழிக்க நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார் நடிகை சினேகா.உலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை.

இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாவட்ட ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை சினேகா. விழாவில் பேசிய சினேகா "போலியோ ஒழிப்பு என்பது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்.." என்றார்.

இதில் தானே முதல் நபராக ரூ 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலைத் தொடங்கிவைத்தார் சினேகா.மேலும் "போலியோ ஒழிப்பு போன்ற நல்ல நோக்கங்களுக்காக பாடுபடும் ரோட்டரி கிளப்பில் என்னையும் ஒரு உறுப்பினராக இன்று முதல் (ஜனவரி) இணைத்துக் கொள்கிறேன்" என்று அறிவித்தார் சினேகா.

ரூ 5000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சினேகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பல்வேறு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சினேகாவிடம் நன்கொடை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரொட்டேரியன் செல்வநாதன் மற்றும் ரொட்டேரியன் சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர்.

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.