Monday, December 20, 2010

எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் - ஜெர்மனிய மருத்துவர்கள் :

எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் என ஜெர்மனிய மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை குணப்படுத்தியதாக ஜெர்மனிய மருத்துவர்ள் அறிவித்துள்ளனர்.

பேர்ளினில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான திமொத்தி பிரவுண் என்பவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி ஆகியவற்றின் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் முதலில் லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவருக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு சிகிச்சைகளின் பின்னர் லுகேமிய புற்று நோய் மற்றும் எயிட்ஸ் ஆகிய நோய்களிலிருந்து குறித்த நபர் குணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டெம் செல் மற்றும் போன் மெரோவ் சிகிச்சைகளின் மூலம் குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ. கிருமிக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியுடைய நபர் ஒருவரின் போன் மெரேவ் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வீ. தொற்றிய நபர் ஒருவர் முழுமையாக சுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இதனை கருதுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சிகிச்சைகளின் போது குறித்த நபர் பல்வேறு பக்க விளைவுகளை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Thursday, December 9, 2010

அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்



‘காவலன்’ படத்துக்காக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தோடு மோதி வருகிறார் இளையதளபதி விஜய்.

தமிழ் சினிமாவை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாராம்.

ஆனால் இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் பக்கமிருந்து எந்தவித தகவலும் இதுவரை வராத காரணத்தால் வருத்தமடைந்தாரம்.

‘காவலன்’ படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் ரசிக்கும்படியாகவே வந்துள்ளதாம்.

‘காவலன்’ மாதிரி பெரிய படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ,அது மாதிரி ஆங்காங்கே ஒரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது. ஆகவே பரபரப்பு கிளம்பும் என்று ஆவேசத்துடன் கூறுகிறார் இளைய தளபதி.

நீங்க அரசியலில் முழுமூச்சாக இறங்குவது உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விக்கு. தமிழ் சினிமாவின் மக்கள் செல்லவாக்கு உள்ள நடிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.

நான் அரசியலில் இறங்குவது தொடர்பாக அடிக்கடி கிளம்பும் கற்பனை ஊற்று தகவல்களை என்னால் தடுக்க இயலாது, என்கிறார்

இரண்டு கோபக்காரர்களை இணைத்த படம்!


"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு பேரும் கடுகடுவென எரிந்து விழுந்து கோபத்தை கொட்டுகிற பார்டிகளாம். 'தங்கரும் கோபக்காரர், நீங்களும் கோபக்காரர் எப்படி சேர்ந்து வேலை பார்த்தீர்கள்?'என்று பிரபுவிடம் கேட்டால், முதலில் இது உனக்கு சரி பட்டு வராது என்றார்கள்.

தங்கர் எதையும் படு 'ஹாட்டாக' விமர்சனம் செய்யக்கூடியவர் என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.எத்தனையோ நடிகர்களை விட்டு என்னை 'செலக்ட்' பண்ணியது ஏன்? என்று அவரிடம் கேட்டேன்.

நீதான் கமர்சியல் நடிகர் என பெயர் எடுத்திருக்கே.அதான் உன்னை கூப்பிட்டேன் என்றார்.டான்ஸ், மசாலா,கலகலப்பு, ஜாலி இதையும் மீறி பிரபு தேவாவுக்குள் இன்னொரு 'பரிணாமம்'இருக்கு என்பதையும் காட்டியுள்ளார்.

அதையும் சொன்னபடி எடுத்துள்ளார். அருமையாக வந்துள்ளது. நிச்சயம் எனக்கு இது வித்தியாசமான அனுபவம்தான்.

எனக்கு இருக்கிற கமர்சியல் இமேஜ் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு நடித்திருக்கேன்.அவர் சீரியசாக படம் எடுத்தாலும்,ஜாலியான மனிதர்.படப்பிடிப்பில் ஒரே ஜாலிதான்.

களவாடிய பொழுதுகள் சீரியசான படமாக இருந்தாலும் கமர்சியலாக வெற்றி பெறும்.தங்கர் பச்சானும் ஒரு நடிகர்தான்.

அவரை என் டைரக்சனில் நடிக்க வைத்து 'பெண்ட'நிமிர்த்தி வேலை வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்' என்கிறார் பிரபு தேவா

புயலில் தத்தளித்த படக்குழு


வரலாற்றை சினிமாவுக்காக திருப்பியும், புரட்டியும் போட்டு 'உருமி' படத்தை எடுத்து வருகிறார் அவார்டு பட படைப்பாளி "சந்தோஸ் சிவன்".

உருமி என்பது ஒரு வகையான ஆயுதம். பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் இந்திய இளசுகள், வாஸ்கோடா காமாவை தேடிப்போய் கொல்கிறார்களாம்.

ரொம்ப வேகமாக படத்தை எடுத்து முடித்துவிட்டார்களாம். சீரியசான விசயமுள்ள படத்தை இப்படி எடுத்ததால் படத்தில் நடித்த பிருதிவி ராஜ், பிரபு தேவா,ஜெனிலியா, நித்யா மேனன், தபு, வித்யா பாலன் ஆகியோருக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை.

மும்பைலிருந்து மால்ஷேகாட்ஸ் என்ற இடத்தில் சூட் பண்ணும் போது புயலில் சிக்கிய அனுபவத்தை பெற்றதாம் படக்குழு. அந்த காட்சியில் நடிக்கும் போது பிரபுதேவா ஆடிப்போனாராம்.

படத்துக்காக பணிபுரிந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை 'உருமி' தந்துள்ளது

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.