Sunday, March 28, 2010

தென் கொரியா கப்பல் மூழ்கியது : 40 பேரை காணவில்லை

தென் கொரியா கப்பல் ஒன்று வட கொரியா அருகே மூழ்கி விட்டதாகவும், அதில் பயணித்த 40 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான நிலை இருந்து வருகிறது.

இதனிடையே இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக வட கொரியாவில் தற்போதுள்ள அரசை கவிழ்க்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முயற்சிப்பதாகவும், ஆனால் ஆட்சியைக் காப்பாற்ற அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் வட கொரியா நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வட கொரியாவுடனான கடல் எல்லை பிரச்னை உள்ள இடத்தின் அருகே சுமார் 1,200 டன் எடைகொண்ட தென் கொரிய ரோந்து கப்பல் ஒன்று , 104 பணியாளர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மூழ்கியது.

இது குறித்த தகவலறிந்ததும் மீட்பு படையினர், உடனடியாக விரைந்து சென்று 58 பேரை மீட்டனர். ஆனால் 40 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தங்களது கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வட கொரியா காரணமாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்

Sunday, March 21, 2010

அவுஸ்திரேலியாவில் கடும் சுறாவளி தாக்குதல்

வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சுறாவளி காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சுமா‌ர் 60 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீடுக‌ளி‌ல் ‌மி‌ன் இணை‌ப்பு து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.அவுஸ்திரேலியாவின் ஆ‌‌ர்லி கடற்பகுதியில் உருவாகியிருந்த உல்யூ (Ului) புயல் இன்று காலை 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது வீசிய சுறாவளிக் காற்றில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. கடற்கரையில் இருந்த பல படகுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான 'கிரேட் பேரியர் ரீஃப்' எனும் இடத்தில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ரேலிய அமைச்சர் நீல் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

Monday, March 15, 2010

“ஜேர்மனியில் வரலாறு காணாத இராட்சத விபத்து!புயலடித்த தேசம்போல காட்சியளிக்கும் நகரம்.

காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.




ஜேர்மனியில் நேற்று வெள்ளி கிழமை வரலாறு காணாத பெரிய விபத்து இடம் பெற்றது. இந்த அனர்த்தத்தில் சுமார் 231 வாகனங்கள் ஒரேயடியாக சிக்குண்டுபோயின.

ஜேர்மனிய ஊடகங்கள் இதை இராட்சத விபத்து என்று வர்ணித்துள்ளன.

171 கார்களும் 35 பாரவண்டிகளும் இதில் சிக்குண்டன.

ஏ8 பிரதான வீதியில் அவுஸ்பேக் – பிறிட்பேர்க் நகரங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம் பெற்றது.

இதனால் போக்குவரத்தில் பாரிய நெரிசலும் தடைகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை வீதி சீராக்கப்படவில்லை, இப்பகுதி முழுவதும் புயலடித்த தேசம்போல காட்சியளிக்கிறது.

17 முதல் 25 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.


































சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.