Sunday, May 30, 2010

இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா இலகு வெற்றி


இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரில் இந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் ரோஹிட் சர்மாவின் சதத்துடன் இந்தியா அணி இலகு வெற்றிப் பெற்றது.

சிம்பாப்வேயின் புலவாயோவில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களதடுப்பை மேற்கொள்ள தீர்மாணித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.5 ஓவர்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மெத்தியூஸ் 75 ஓட்டங்களையும், டில்சான் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

243 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 43.3 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ரோ ஹிட் சர்மா 101 ஓட்டங்களையும், விராட் ஹோலி 82 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹிட் சர்மா தெரிவு செய்யப்பட்டார். அடுத்த போட்டி ஜீன் முதலாம் திகதி இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.