Monday, June 21, 2010

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கான காரணம்.


சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.

இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.