ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர். மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது. மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார். இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார். மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார். |
Showing posts with label monalizha. Show all posts
Showing posts with label monalizha. Show all posts
Sunday, July 18, 2010
புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள்
Subscribe to:
Posts (Atom)
சூரியனின் கதை

நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.
