மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்த் முன்பதிவு செய்யப்பட்ட சில காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு எதிர்பாராத விதமாக திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.
வழக்கமாக படங்களில் காதலுக்கு எதிராக வில்லன்கள் இருப்பார்கள். ஆனால் இதில் காதலுக்கு காரணமாக வில்லன் இருப்பார்.
விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை.
தமிழுக்கு தகுந்தமாதிரி 'வானத்தை' மாற்றியவர்கள், ஸ்டைலிஸ் ப்ளஸ் டெக்னிக்கலாக உருவாக்கினார்களாம்.
டேனி பாய்ல் இயக்கத்தில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தந. அந்தப் படம் ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கர்களை தட்டிச் சென்றது.
இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாவட்ட ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.
