Wednesday, February 3, 2010

பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம்

பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் பாடங்களை நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவ, மாணவி களுக்கு கடிதம் எழுதுகிறார்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனித் தனியே கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பொதுத் தேர்வினை நல்ல முறையில் பயமில்லாமல் எழுத வேண்டும் என்றும், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைவதால் மிக கவனத்துடன் தேர்வினை எழுதி வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தும், அறிவுரையும் கூறியிருந்தார்.

இக்கடிதம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியில் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இந்த ஆண்டும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம் எழுதுகிறார். இக்கடிதத்தில், மாணவ, மாணவிகள் நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என்று அறிவுரை கூற இருக்கிறார். இந்த கடிதம் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆசிரியர்கள் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வரும் வரை முடிந்த வரை அனைத்து உதவிகளை யும் செய்து அவர்களை தேர் வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகப்படுத் தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்காது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.