Sunday, February 7, 2010

பி.டி.​ கத்தரிக்காயை வர்த்தக நோக்கில் பார்க்கும் மத்திய அரசு: ஜகி வாசுதேவ்

பி.டி. கத்தரிக்காய்க்கு ​அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது என ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிகுந்த நச்சுத்தன்மை உள்ளது.​ பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாக உள்ளது.

இந் நிலையில்,​​ ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வரத் தேவையில்லை.​ இது பொறுப்பற்ற செயல்.​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும்.​ இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.

ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.​ அமெரிக்கா,​​ ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி.​ ரக பயிர்கள் பயிரிடப்பட்டன.​ அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.

பி.டி.​ பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள்,​​ இயற்கை ஆர்வலர்கள்,​​ விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.​ இருப்பினும்,​​ மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால் இந்தியா அடிமைப்படும் சூழல் உருவாகும்.​ நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன.​ 60 சதம் பேர் சைவ உணவுகளையும்,​​ 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.​

மனிதனுக்குத் தேவையான சத்து,​​ சைவ உணவில்தான் இருக்கிறது.​ ஆனால்,​​ அதற்கு நல்ல விதைகள் தேவை.​ அவற்றை இயற்கையான முறையில் உருவாக்க வேண்டும்.

நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும்.​ அதனால்,​​ மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பக்குவமாகவும்,​​ இயற்கையாகவும் இருப்பது அவசியம்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.​ இருப்பினும்,​​ அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.​ இது குறித்து ஈஷா தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்படும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை தடை செய்து அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.