Friday, February 5, 2010

தரமில்லாத அரசு பல்கலைகழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.விஸ்வநாதன்

சென்னை, பிப். 06: விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிகளை ஊக்குவித்தால் மட்டுமே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். முதல் கட்டமாக அதிக கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுஜிசி குழுவில் 1500 கல்வியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கினர். ஆனால் தாண்டன் குழுவினர் டெல்லியில் இருந்து கொண்டே தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

நிகர்நிலை அங்கீகாரம் பெற்று 2 ஆண்டுகளே ஆன பல பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர். பல்கலைக்கழகம் தொடங்கி குறைந்தது 10 ஆண்டுகள் கடந்தால்தான் முழு வளர்ச்சியை பெற முடியும். தரமில்லாத பல்கலைக்கழகங்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்பு ஒரு அறிவிப்பாவது கொடுக்க வேண்டும். எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வோம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்க எந்த வசதியும் இல்லை. அந்த பல்கலைக்கழகங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் பிரச்னையில் அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.