Thursday, January 13, 2011

ர‌ஜினி படத்தின் பெயர் ராணா?


முதலில் ஹரா என்றார்கள். பிறகு சுல்தான் தி வா‌ரியர் என விளம்பரம் செய்து ட்ரெய்லரும் வெளியிட்டார்கள். படத்தயா‌ரிப்பில் இருந்த பிரச்சனைகளை முடித்தபின் மீண்டும் ஹரா என்று பெய‌ரிட்டனர்.

ஆனால் இந்தப் பெயரும் மாறக்கூடும் என்பது இன்டஸ்ட்‌ரி தகவல்.

ர‌ஜினி நடிக்கும் சுல்தான் தி வா‌ரியர் படத்துக்கு ஹரா என்ற பெயரை தேர்வு செய்ததாக ர‌ஜினியே அறிவித்தார். ஆனால் ஹரா என்பது சமஸ்கிருதப் பெயர். வ‌ரிவிலக்கு கிடையாது.

அதனால் படத்தின் பெயரை ராணா என்று மாற்றலாமா என யோசித்து வருகிறார்கள். விரைவில் ர‌ஜினியிடமிருந்தே இது குறித்து அறிவிப்பு வரலாம்.

ரசிகர்களுக்கு விருந்து என்னாச்சு தலைவா?

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.