Thursday, December 9, 2010

அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்



‘காவலன்’ படத்துக்காக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தோடு மோதி வருகிறார் இளையதளபதி விஜய்.

தமிழ் சினிமாவை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாராம்.

ஆனால் இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் பக்கமிருந்து எந்தவித தகவலும் இதுவரை வராத காரணத்தால் வருத்தமடைந்தாரம்.

‘காவலன்’ படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் ரசிக்கும்படியாகவே வந்துள்ளதாம்.

‘காவலன்’ மாதிரி பெரிய படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ,அது மாதிரி ஆங்காங்கே ஒரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது. ஆகவே பரபரப்பு கிளம்பும் என்று ஆவேசத்துடன் கூறுகிறார் இளைய தளபதி.

நீங்க அரசியலில் முழுமூச்சாக இறங்குவது உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விக்கு. தமிழ் சினிமாவின் மக்கள் செல்லவாக்கு உள்ள நடிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.

நான் அரசியலில் இறங்குவது தொடர்பாக அடிக்கடி கிளம்பும் கற்பனை ஊற்று தகவல்களை என்னால் தடுக்க இயலாது, என்கிறார்

இரண்டு கோபக்காரர்களை இணைத்த படம்!


"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு பேரும் கடுகடுவென எரிந்து விழுந்து கோபத்தை கொட்டுகிற பார்டிகளாம். 'தங்கரும் கோபக்காரர், நீங்களும் கோபக்காரர் எப்படி சேர்ந்து வேலை பார்த்தீர்கள்?'என்று பிரபுவிடம் கேட்டால், முதலில் இது உனக்கு சரி பட்டு வராது என்றார்கள்.

தங்கர் எதையும் படு 'ஹாட்டாக' விமர்சனம் செய்யக்கூடியவர் என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.எத்தனையோ நடிகர்களை விட்டு என்னை 'செலக்ட்' பண்ணியது ஏன்? என்று அவரிடம் கேட்டேன்.

நீதான் கமர்சியல் நடிகர் என பெயர் எடுத்திருக்கே.அதான் உன்னை கூப்பிட்டேன் என்றார்.டான்ஸ், மசாலா,கலகலப்பு, ஜாலி இதையும் மீறி பிரபு தேவாவுக்குள் இன்னொரு 'பரிணாமம்'இருக்கு என்பதையும் காட்டியுள்ளார்.

அதையும் சொன்னபடி எடுத்துள்ளார். அருமையாக வந்துள்ளது. நிச்சயம் எனக்கு இது வித்தியாசமான அனுபவம்தான்.

எனக்கு இருக்கிற கமர்சியல் இமேஜ் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு நடித்திருக்கேன்.அவர் சீரியசாக படம் எடுத்தாலும்,ஜாலியான மனிதர்.படப்பிடிப்பில் ஒரே ஜாலிதான்.

களவாடிய பொழுதுகள் சீரியசான படமாக இருந்தாலும் கமர்சியலாக வெற்றி பெறும்.தங்கர் பச்சானும் ஒரு நடிகர்தான்.

அவரை என் டைரக்சனில் நடிக்க வைத்து 'பெண்ட'நிமிர்த்தி வேலை வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்' என்கிறார் பிரபு தேவா

புயலில் தத்தளித்த படக்குழு


வரலாற்றை சினிமாவுக்காக திருப்பியும், புரட்டியும் போட்டு 'உருமி' படத்தை எடுத்து வருகிறார் அவார்டு பட படைப்பாளி "சந்தோஸ் சிவன்".

உருமி என்பது ஒரு வகையான ஆயுதம். பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் இந்திய இளசுகள், வாஸ்கோடா காமாவை தேடிப்போய் கொல்கிறார்களாம்.

ரொம்ப வேகமாக படத்தை எடுத்து முடித்துவிட்டார்களாம். சீரியசான விசயமுள்ள படத்தை இப்படி எடுத்ததால் படத்தில் நடித்த பிருதிவி ராஜ், பிரபு தேவா,ஜெனிலியா, நித்யா மேனன், தபு, வித்யா பாலன் ஆகியோருக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை.

மும்பைலிருந்து மால்ஷேகாட்ஸ் என்ற இடத்தில் சூட் பண்ணும் போது புயலில் சிக்கிய அனுபவத்தை பெற்றதாம் படக்குழு. அந்த காட்சியில் நடிக்கும் போது பிரபுதேவா ஆடிப்போனாராம்.

படத்துக்காக பணிபுரிந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை 'உருமி' தந்துள்ளது

Sunday, October 31, 2010

சூரியனை போல இருமடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் (மின் இயக்கமற்ற) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது:

சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது. அணுக் கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது.

இந்த நட்சத்திரத் தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும். இது விண்வெளிக் கோளத்தில் சுற்றி வரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும். இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார்

Sunday, August 1, 2010

ஏனைய தொழிநுட்ப செய்தி தட்ப வெப்ப மாறுதல் காரணமாக 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது.

இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

Sunday, July 18, 2010

புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள்

எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.

மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.

இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார்.

மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார்.

Monday, July 12, 2010

மனித முகத்துடன் அதிசய மீன்!

பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது.

44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன.

இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.